free website hit counter

இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஹெட் 33 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த ஸ்மித் 0 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து டேவிட் வார்னர் மிட்செல் மாட்ஷ் உடன் இணைந்தார்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்ஷ் 47 ரன்னிலும், வார்னர் 23 ரன்னிலும், இதையடுத்து களம் இறங்கிய லபுஸ்சாக்னே 28 ரன், அலெக்ஸ் கேரி 38 ரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து சீன் அப்போட், ஆஷ்டன் அகர் இணை ஜோடி சேர்ந்தது. இறுதியில் அந்த அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 47 ரன், அலெக்ஸ் கேரி 38 ரன், டிராவிஸ் ஹெட் 33 ரன் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டும், அக்சர் பட்டேல், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் சற்று நிதானமாக ஆடிய சுப்மன் கில் 37 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் விராட் கோலி-கேஎல் ராகுல் ஜோடி சற்று தாக்குப்பிடித்து நம்பிக்கை அளித்தது. கேஎல் ராகுல் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் 2 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் அரை சதம் கடந்த விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சூரியகுமார் யாதவ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

185 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். அவர் 40 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த சில நிமிடங்களில் ரவீந்திர ஜடேஜா 18 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்தியாவின் வெற்றிக் கனவு தகர்ந்தது.

49.1 ஓவர்களில் இந்திய அணி 248 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என கைப்பற்றியது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஆடம் சாம்பாவும்,
தொடரின் ஆட்டநாயகனாக மிட்செல் மார்ஷூம் தெரிவாகினர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula