free website hit counter

3வது டெஸ்ட் போட்டி - 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 197 ரன் எடுத்தது.
உஸ்மான் கவஜா 60 ரன்னும் , லபுஷேன் 31 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 4 விக்கெட்டும் , அஸ்வின் , உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்னே இலக்காக இருந்தது.

புஜாரா அதிகபட்சமாக 59 ரன்னும் , ஸ்ரேயாஸ் அய்யர் 26 ரன்னும் எடுத்தனர். நாதன் லயன் அபாரமாக பந்து வீசி 64 ரன் கொடுத்து 8 விக்கெட் சாய்த்தார். ஸ்டார்க் , மேத்யூ குனமேன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 76 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. உஸ்மான் கவாஜாவும், டிரெவிஸ் ஹெட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே இந்தியா அதிர்ச்சி கொடுத்தது. அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 2-வது பந்திலேயே உஸ்மான் காவாஜா ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

ஆனால், அடுத்து வந்த லபுஷேனும், ஹெட்டும் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிரெவிஸ்ஹெட் 49 ரன்னும், லபுஷேன் 28 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 9-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction