free website hit counter

32வது ஒலிம்பிக் போட்டி : இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜப்பானில் அடுத்தமாதம் நடைபெறப்போகும் 32வது ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து செல்லவுள்ள வீரர்களுக்கு பிரதமர் மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி இவ்வாண்டு வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய ஆண்கள் ஆக்கி அணி கடந்தவாரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16பேர் கொண்ட இவ் அணிக்கு கேப்டனாக நடுகள வீரர் மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்

டோக்கியோ 2021 ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இன்னும் சில வாரங்களில், தொடங்குகிறது. இதில் பங்கேற்கவுள்ள நமது குழுவினருக்கு வாழ்த்துக்கள். மேலும் பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction