free website hit counter

இலங்கை அணியில் மீண்டும் இணையும் முன்னாள் அணித்தலைவர்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சண்டே டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியின் படி , இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்டக்காரருமான தினேஷ் சந்திமால் தேசிய அணிக்கு விளையாட மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.


ஆர் பிரேமதாசா அரங்கில் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளுக்கு இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையில் நடக்கவிருக்கின்றன.இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமிற்கு தசுன் சானக தலைவராக கடமையாற்றுவார்.

மேலும் இந்த குழாமில் குசல் ஜனித் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்ச, தனஞ்சய டி சில்வா, பாத்தும் நிசங்க, சரித் அசலங்கா, கமிந்து மெண்டிஸ், மினோத் பானுகா, தினேஷ் சந்திமால், அஷேன் பண்டார, வானிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, சஹான் ஆர்ச்சிகே, லஹிரு மதுஷங்க (உடற்தகுதிக்கு உட்பட்டவர்), துஷ்மந்த சமீரா, பினுரா பெர்னாண்டோ, நுவான் பிரதீப், தில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, அகில தனஞ்சய, பிரவீன் ஜெயவிக்ரம, மகேஷ் தீக்ஷனா, புலின தரங்கா, ரமேஷ் மென்டிஸ் மென்டிஸ் மெண்டிஸ் இஷான் ஜயரத்ன, தனஞ்சய லக்ஷன், ஷிரான் பெர்னாண்டோ. ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

சந்திமால் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டது அவரை டி20 உலக கிண்ணத்திலும் காணலாம் என்ற எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction