ஐ.பி.எல் சுற்றுப்போட்டிகளை கடந்த ஆண்டு போல ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடத்த தீர்மானித்துள்ளது. செப்டம்பர் தொடக்கம் அக்டோபர் காலப்பகுதியில் மிகுதி ஐ.பி.எல் சுற்றுப்போட்டிகளை நடத்த எற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இந்தியன் ப்ரிமியர் லீக் (IPL) 2021 வெகு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கையில் திடீர் கொரோனா பரவல் வேகம் வீரர்களிடையே அதிகரிக்க இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) செய்வது அறியாது ஐ.பி.எல் சுற்றுப்போட்டிகளை இடைநிறுத்தியது. இவ்வருடம் இடம்பெற காத்திருக்கும் ஆண்கள் டி20 உலக கோப்பை (ICC Men’s T20 World Cup) நடைபெற முன்பு மிகுதி ஐ.பி.எல் சுற்றுப்போட்டிகளை எவ்வாராயினும் நடத்தி முடிப்பதற்கான வழிகளை தேடிய இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), தற்போது மிகுதி ஐ.பி.எல் சுற்றுப்போட்டிகளை கடந்த ஆண்டு போல ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடத்த தீர்மானித்துள்ளது. செப்டம்பர் தொடக்கம் அக்டோபர் காலப்பகுதியில் மிகுதி ஐ.பி.எல் சுற்றுப்போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
எவ்வாறாயினும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் சுற்றுப்போட்டி செப்டம்பர் 14ம் திகதி நிறைவுபெறும். அதன் பிறகு தொடர்ச்சியாக வேறு நாடுகளுடன் கிரிக்கட் தொடர் சுற்றுப்போட்டிகள் இருப்பதானால் இங்கிலாந்து வீரர்களின் ஐ.பி.எல் வருகை கேள்விக்குறியாகியுள்ளது. மற்றும் ஆகஸ்ட் 28 தொடக்கம் செப்டம்பர் 19 வரை கரீபியன் ப்ரிமியர் லீக் (CPL) சுற்றுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இவ்வாறான பல சிக்கலுக்கு மத்தியில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சிக்கியுள்ளது.
இந்தியன் ப்ரிமியர் லீக் (IPL) 2021 இல் இன்னும் எஞ்சியுள்ள போட்டிகள் நடைப்பெறும் என்ற எதிர்பார்ப்புடன் பல கோடிக்கணக்கான ஐ.பி.எல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
-நாஜில்