website analysis

ஜோதிடர் பேச்சால் மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கும் தவெக அரசு: மு.க. ஸ்டாலின்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிப்பதாக தவெக அரசு மீது முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

உலக மீனவர்கள் நாளில் வாழ்த்து தெரிவித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு உலக மீனவர்கள் நாள் வாழ்த்துகள்.

தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.

அத்தகைய மீனவ மக்களுக்காக கடந்த திமுக ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

ஆனால், தற்போதைய தவெக அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதல்வருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.

மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்.

அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்