தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், தமிழக அரசு
டெங்குவை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் காவல்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினர் கொரோனா ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், மழைகாலம் தொடங்குவதைத் தொடர்ந்து 300 இற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் சீர் செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன், மருந்துகள் தெளித்து பல்வேறு மழைகால தொற்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாகவும் தெரிவித்தார்.