தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி அக்டோபர் 6 ,அக்டோபர் 9 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.
அலுவலக நாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் திகதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி திகதியாகும். வரும் 23 ஆம் திகதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.