free website hit counter

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு - 91.39% பேர் தேர்ச்சி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.39% ஆகும்.
சென்னை,

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார் .10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆக உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.inமற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction