free website hit counter

தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின்

வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். நாளை தீபாவளி என்பதால் இன்று சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

நேற்று இரவு 12 மணி நிலவரப்படி,  வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளும், 1,344 சிறப்பு பேருந்துகளும் ஆக கடந்த இரண்டு தினங்களில் மொத்தம் 5,932 பேருந்துகளில் 2,34,918 பயணிகள் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,07,744 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில், அதனை பொருட்படுத்தாது பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு மும்முரமாக புறப்பட்டு சென்று வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction