கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்துக்கு விரைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. ஒரு லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.