free website hit counter

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன - மத்திய அரசு தகவல்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டது.

இந்த சூழலில், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் பணிகள் குறித்து சில எம்.பி.க்கள் மக்களவையில் கேள்விகள் கேட்டிருந்தனர். அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று எழுத்துப்பூர்வ பதில் அளித்திருந்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் ஜூன் 16 தேதியிட்ட அரசு வர்த்தமானி வெளியிடப்பட்டதன் மூலம் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியதாக பதிலில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் டெல்லியில் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குநர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula