18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இனி இலவச தடுப்பூசிகளை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்போது கொரோனா தடுப்பூசி குறித்து பேசினார். அதில் :
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக உலக மக்கள் போராடி வருகின்றனர். இந்தியாவும் முன்களத்தில் நின்று இப்போரில் போராடிவருகிறது. பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் இந்தியா சந்தித்து வருகிறது.
தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ள நிலையில் உள்நாட்டில் தயாரித்த தடுப்பூசிகள் உயிர் காக்கும் மருந்தாக பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது. ஆக்ஸிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுபோல் தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் முடிவுக்கு வரும். தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசியை கொண்டு செல்வோம். இதற்கான நடவடிக்கை வேகப்படுத்தபடும்.
ஆகையால் மீண்டும் மத்திய அரசே தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும். உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் விரைவுபடுத்தவுள்ளதுடன்; வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசிகளை ஜூன் 21 முதல் வழங்கும் எனவும் தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும். எனவும் தெரிவித்துள்ளார்.