சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் புதிய வழக்குகள் தானாக விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
இந்த நடைமுறையில் காலதாமதம் ஏற்படும் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகும் வக்கீல் தங்களது மனுவை அவசரமாக எடுத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சுப்ரீம் கோர்ட்டில் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும், அடுத்த திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
மேலும், அவரச வழக்குகள் இருந்தால் நாங்கள் குறிப்பிடுவோம், பிற வழக்குகள் அனைத்தும் தானாக பட்டியலிடப்படும். இது தொடர்பாக நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.