அரசு பேருந்து உட்பட பொது இடங்களுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சி விதித்துள்ளது.
தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லை என்று பல்வேறு கட்டுப்பாடுகளை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சி விதித்துள்ளது. “தடுப்பூசி போடப்படாதவர்கள் பூங்காக்கள், பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நுழைய தடை விதிக்கப்படும். முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசிக்காக காத்திருந்தாலும் அவர்களுக்கு அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். பிரதி காப்பியாகவோ அல்லது செல்போனிலோ வைத்திருக்க வேண்டும். மாநகராட்சியின் கீழ் உள்ள பொதுப் போக்குவரத்துகள், அரசு சார்ந்த பொது இடங்களில் அவை சரிபார்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்திருந்தாலும், போக்குவரத்து சேவைகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.