free website hit counter

வாய் பேச முடியாத மூதாட்டியை கொடூரமாக கட்டையால் அடித்த நபர்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திருப்பூர் மாவட்டம் பனத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் குப்பன்- ஜக்கம்மாள் தம்பதியினர். ஜக்கம்மாள் வாய்பேச முடியாத நிலையில் இருப்பவர்.

இவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் செல்லமுத்து என்பவரிடம் வீடு கட்டுதல் தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சூழலில் செல்லமுத்துவின் வீடு கட்டுமானத்திற்கான செங்கல்லை பாதையின் நடுவே கொட்டப் பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜக்கம்மாள் “என் வீட்டிற்கு கட்டுமான பொருட்கள் கொண்டுவர வண்டி வாகனம் வர முடியாது” நிலை உள்ளதாகவும் “செங்கலை ஓரமாக வைத்துக் கொள்ளுமாறு” ஜாடையில் செல்ல முத்துவின் மனைவி மஞ்சுவிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து தனது மனைவியின் மூலம் நடந்ததை அறிந்து ஆத்திரமடைந்த செல்லமுத்து விறகு கட்டையின் மூலம் ஜக்கம்மாவை கை, கால் என சரமாரியாக கட்டையை வைத்து தாக்கியுள்ளார். வாய் பேச முடியாத நிலையில் ஜக்கம்மாள் அலறித் துடித்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வரவும் செல்லமுத்து அங்கிருந்து தப்பியுள்ளார்.

தொடர்ந்து ஜக்கம்மாளை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் அதிகப்படியான காயங்களும், எழும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தினால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த குடிமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்கிவிட்டு தப்பிச் சென்ற செல்லமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.

வாய் பேச முடியாத மாற்று திறனாளி ஒருவரை கொடூரமாக தாக்கி கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction