இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, பொது மக்கள் பெருமளவில் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என, நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான, கமஸ்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்கள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யப்படாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது அவர் தனது சமூக வலைத்தளப்பத்தில் வெளியிட்டிருக்கும் ட்வீட் குறிப்பில், “மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். ” என தெரிவித்திருக்கிறார்