free website hit counter

சென்னையில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சென்னையில் ஜனவரி மாதம் 16,17 மற்றும் 18-ந் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து சென்னையில் ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

வாசர்களின் திருவிழாவில் இந்தாண்டு திருநங்கைகள் / பால்புதுமையினர் இலக்கியங்கள் இடம்பெற உள்ளதாக பா.ப.சி. -யின் செயலாளர் எஸ்.கே. முருகன் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula