free website hit counter

இந்தியாவின் முதல் மதுபான அருங்காட்சியகம் கோவாவில்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குடிமகன்களை கவரும் வகையில் கோவாவில் மதுபானங்களுக்கென தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு ‘All About Alcohol' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வடக்கு கோவாவில் உள்ள காண்டொலிம் கிராமத்தில் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. நந்தன் குத்சத்கார் என்ற தொழிலதிபர் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முதல் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

கோவாவில் புகழ்பெற்ற பெனி மதுவுடன் தொடர்புடைய பழங்காலப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெனி என்பது முந்திரியில் இருந்து எடுக்கப்படும் மதுபானமாகும். நூற்றாண்டுகளுக்கு முன் பெனியை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட கண்ணாடி பொருட்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

கோவாவில் மதுபானத்துடன் தொடர்புடைய வரலாற்றை பறைசாற்றுவதே இந்த அருங்காட்சியத்தின் நோக்கம் என அதை அமைத்த தொழிலதிபர் நந்தன் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“ஸ்காட்லாந்திலும், ரஷ்யாவிலும் மதுவை கொண்டாடுகின்றனர்.
அவர்கள் மதுபானங்களை பெருமையாக காட்சிப்படுத்துகின்றனர். ஆனால் இந்தியாவில் மதுபானம் வேறு ஒரு கோணத்தில் பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவின் முதல் மதுபான அருங்காட்சியகத்தை அமைக்க முடிவு செய்தேன். கோவா மக்களுக்கு மது என்பது விருந்தோம்பலின் அடையாளம்” என்று கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula