website analysis

சென்னை மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மின்வெட்டுக்கள் தொடர்ச்சியாக  ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மின்வெட்டு தொடர்பான புகார்கள் குறித்து விசாரிப்பதற்காகவும், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காகவும்,  சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில், தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது  மின்கட்டமைப்பை வலுப்படுத்துவது, மின் தேவையை பூர்த்தி செய்வது, நுகர்வோர் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், மின் உற்பத்தி, கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் ஆகியவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அமைச்சர் நிர்மல் குமார், மின் வாரிய தலைவர் அருண்ராய், பசுமை எரிசக்தி கழகம் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோரும் இதன்போது உடனிருந்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்