free website hit counter

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்துக்கான எல்லைகள்- மத்திய அரசு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் ஏவும் பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு இடம் தேர்வு விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதியை மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி கிழக்கு கடற்கரை சாலையான தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி சாலையை ஒட்டியுள்ள படுக்கபத்து மற்றும் சாத்தான்குளம் தாலுகாவில் பள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் தாலுகாவில் மாதவன்குறிச்சியை உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதன் வடக்கு எல்லையாக தாண்டவன்காடு, நாராயணபுரம் மற்றும் மாதவன்குறிச்சி கிராமங்களும், தெற்கே மன்னார் வளைகுடா, கிழக்கே மன்னார் வளைகுடா மற்றும் அமரபுரம், மணப்பாடு கிராமங்களும், மேற்கே படுக்கபத்து மற்றும் எள்ளுவிளை கிராமங்களும் அடங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction