free website hit counter

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் வருகின்ற 14ஆம் திகதி முதல் ஆரம்பம் - தேர்வு வாரியம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சமீபத்தில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டது.
அதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் திகதி (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி திகதி அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் திகதி என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தேர்வை பொறுத்தவரையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிப்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction