எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 12-ம் தேதி பாட்னாவில் நடைபெறுவதாக இருந்தது.
இதனிடையே, அடுத்த வாரம் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் அமெரிக்காவில் உள்ளதால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்படுள்ளது. இதனால், வரும் 12-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டம் மீண்டும் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தள்ளிவைக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.