அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி'' என நிருபர்கள் எழுப்பிய
கேள்விக்கு சீமான் கலகலப்பாக பதில் அளித்தார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில்,
வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதில்
அளித்த அவர், தான் ஒரே ஒரு கட்சி உடன் தான் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு
இருக்கிறது என்றும் அது அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சி எனவும் கூறினார்.
தி.மு.க.,-அ.தி.மு.க., இரண்டும் வேறு வேறு கட்சி என்றாலும் ஊழல், லஞ்சம், சாராயம்,
கொலை கொள்ளை, மலையை வெட்டுவது, மணல் கொள்ளை எல்லாம் ஒரே மாதிரி தான்
என்று குற்றம் சாட்டிய சீமான், ஆனால் இருவரும் ஆட்சிக்கு வந்தவுடன் தங்களின்
கோரிக்கைகளை மாறந்து விடுவார்கள் என தெரிவித்தார்.