free website hit counter

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று, ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
புதுடெல்லி,

டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள 'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், முதல்-அமைச்சரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜூன் 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் ஜனாதிபதி ஜூன் 5-ந் தேதி கிண்டியில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து, சென்னை - கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர், "சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்" என கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அறிவித்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் ரூ.230 கோடி செலவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை ஒட்டியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்த விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

முதல்-அமைச்சரின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் மாதம் 5-ம் தேதி சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction