free website hit counter

5ஜி சேவை - 50 நகரங்களின் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன.
இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும்.

மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் 5 சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் அக்.1 முதல் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டது.

நவம்பர் 26 நிலவரப்படி, 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குகிறது. மேலும், விரைவில் பிஎஸ்என்எல்-லில் 5ஜி சேவை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction