free website hit counter

4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து - மத்திய அரசின் அறிவிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த ஏழு ஆண்டுகளில், 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ரத்து

செய்யப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 29 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், போலி ரேஷன் கார்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ரேஷன் அட்டைகளின் தரவுகள் டிஜிட்டல் மயம், போலி அட்டைகளை நீக்குதல், நிரந்தரமான குடிபெயர்வு, இறப்புகள், தகுதியற்ற / ஒரே பெயரில் 2 அட்டைகள் போலி அட்டைகள் கண்டறிதல் போன்றவை காரணமாக, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, 4.28 கோடி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு தான் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தெரிவித்துள்ளன.

குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டைகளை இணைக்காத நிலையில் எந்த குடும்ப அட்டையும் ரத்து செய்யப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அதுவரை ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்குவதை மறுக்கக் கூடாது என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction