இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உதவும் பொருட்டு, திமுக எம்.பி.க்கள், தமது ஒருமாத ஊதியத்தினை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்தனா்.
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண நிதியத்தை உருவாக்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், தமது ஒரு மாத கால ஊதியமான ரூ.30 லட்சத்தினை வழங்கினர். இதற்கான காசோலையை எம்.பி.க்கள் சார்பில், டி.ஆா்.பாலு, ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் நேற்று முதல்வரிடம் நேரில் கையளித்தார்கள்.
																						
     
     
    