இந்தியாவின் வட மாநிலப் பிரதேசங்களான, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இத் தெர்தல்களின் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில், பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. அதேவேளை பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து, குஜராத்தின் ஆமதாபாத் நகரில், இன்று நடைபெறற வெற்றிக் கொண்டாட்டங்களின் போது நடந்த பேரணியில், பிரதமர் மோடி சாலையில் கூட்டத்தினரை நோக்கி வெற்றி சின்னம் காட்டியபடி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பயணித்தார். சாலையின் இருபுறத்திலும் திரளாகக் கூடிநின்ற பொதுமக்களும் பிரதமருக்கு கையசைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.