தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
இது குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் தனித்தனியாக பிரித்து உருவாக்கப்பட்ட தமிழக மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் வரும் செப்.15 திகதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது. இதனையடுத்து தேர்தல் திகதி மற்றும் நேரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் நாளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பது குறிப்பிடதக்கது.