தமிழகத்தில் பொதுவாகவே முழு உடல் பரிசோதனையானது தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான ரூபாய்களை தாண்டும். ஆனால் கோவை அரசு மருத்துவமனையில் மிக குறைந்த விலையில் பரிசோதிக்கப்படுகிறது.
நோய்களை முன்னரே கண்டறிவதன் மூலம் உடல் நலனை பாதுகாத்துக்கொள்ளலாம். அந்த வகையில் முழு உடல் பரிசோதனை பெரிதும் உதவுகிறது. இந்த நிலையில் இப்பரிசோதனையானது மருத்துவமனைக்கு மருத்துவமனை வெவ்வேறு கட்டணங்களில் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.
ஆனால் அதே பரிசோதனையானது உயரிய மருத்துவ ஆலோசனைகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் நடைமுறைக்கு வந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இம்முழு உடல் பரிசோதனை வெறும் 250 ரூபாயில் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த பரிசோதனையானது தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு மருத்துவர்களால் நோய்க்கூறுகள் ஆய்வு செய்து உரிய மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த முழு உடல் பரிசோதனை தொடர்பான கூடுதல் தகவல்களை உதவி இருப்பிட மருத்துவ அலுவலரிடம் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.