இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கீழ் செயல்படாத காரணங்களால் டுவிட்டர், பேஸ்புக் கடந்த இரு தினங்களாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயல்பட இந்திய அரசு புதிய சட்டத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மூன்று மாதங்களுக்கு முன்பே இத்திட்டங்களை வகுத்த நிலையில் அதற்கான காலக்கெடு இன்று மே 26ஆம் திகதியுடன் முடிகிறது. இதுவரை இச் சட்ட திட்டங்களை இவ்விரு வலைத்தளங்களும் ஏற்காமல் செயல்பட்டுவருவதே தற்போது சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் டுவிட்டரில் இவ்விவகாரங்கள் தொடர்பாக ஹாஸ்டக்குகள் தேசிய அளவில் பிரபலமாகி வருகிறது.
இந்திய பயனர்கள் சிலர்; தனிநபர் கணக்குகளைத் தன்னிச்சையாக முடக்குதல், வசவுகள், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிராக நவடிக்கை எடுக்காமல் இருத்தல், ஒரு சில கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படல் போன்ற புகார்களை சமூக வலைத்தளங்கள் மீது சுமத்திவருகின்றனர். ஆகையால் இந்தியாவில் சமூகவலைத்தளங்களை தடை செய்ய வேண்டும் எனவும் பலர் கருத்து வெளியிட்டுவருகின்றன.
ஆனால் தகவல் பரிமாற்றம் எனும் விஷயத்தில் பெரும் பங்காற்றிவரும் சமூக ஊடகங்களை தடை செய்தால் பொதுவிஷயங்கள் மக்களை சென்றடைய தாமதமாகும். விதிகளை கடுமையாக்கி இயங்கவைப்பதே நல்லது என ஒரு சிலர் மாற்று கருத்தை தெரிவித்துவருகின்றனர்.
இதேவேளை இந்தியாவின் பெயருக்கும் பிரதமர் மோடிக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் டூல்கிட் ஒன்றை உருவாக்கியுள்ளதாக பா.ஜ குற்றம் சாட்டின; இதன் தொடர்பாக ஆவணங்களும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டன. எனினும் காங்கிரஸ் இதனை திட்டவட்டமாக மறுத்திருந்ததோடு டுவிட்டருக்கு கடிதம் மூலம் காங்கிரஸ் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு கேட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி போலிஸ் இதன் தொடர்பாக விசாரணையை தொடங்கியிருந்த வேளை டுவிட்டர் நிர்வாகம்; காங்கிரஸ் ஆல் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் சந்தேகத்திற்கிடமானது எனும் முத்திரையுடன் வகைப்படுத்தியது. குறித்த விவகாரம் விசாரணையில் இருக்கும் போது இவ்வாறு டுவிட்டர் செயல்பட்டதால் உரிய விளக்கம் தரக்கோரி டெல்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாரான காரணங்களினாலும் டுவிட்டரை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் பலர் கூறி வருகின்றனர்.