புதிதாக திருத்தம் செய்யப்பட்ட மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து
போராட்டம் நடத்தி வருகின்றன. இன்றுடன் இப்போராட்டத்தின் ஆறுமாதகாலம் நிறைவடைவதால் நாடுமுழுவதும் விவசாயிகள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.
இந்திய அரசால் திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பபெறக்கோரி விவசாயிகள் கடந்தாண்டு மே 26ஆம் திகதி டெல்லி எல்லைகளில் முற்றுகைபோராட்டத்தை ஆரம்பித்தனர்.
முழுமையான தீர்வு இதுவரை காலமும் எட்டப்படாத நிலையில் விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்நிலையில் இன்று போராட்டத்தின் 6மாத நிறைவையொட்டி 40 விவசாய சங்கங்கள் இந்நாளை கருப்புதினமாக அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி உள்பட 12 எதிர்க்கட்சிகள் விவசாயிகளின் போராட்ட அழைப்புக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன.
இதேவேளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு ஆதரவாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.