இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவலை அடுத்து கொரோனா நோயாளிகளை தாக்கும் Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் பரவுதாக தெரிவிக்கப்படுகிறது.
2ஆம் அலையாக நாட்டில் கொரோனா வேகமாக பரவியதின் தாக்கம் மெல்ல குறைந்துவரும் நிலையில் சில மாநிலங்களில் கரும்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகியவை உள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 100 பேர் வரை இத்தொற்றால் பாதிப்படைந்ததையடுத்து அம்மாநில அரசு இந்நோய் பாதிப்பை பெருந்தொற்றாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு சிகிச்சையை உறுதிசெய்ய முடியும் என அம்மாநில சுகாதார முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டுவருபவர்களை இந்நோய் தாக்குவதாகவும் நீரிழிவு நோயாளிகளே இத்தொற்றால் அதிகம் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர், இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.