free website hit counter

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு: நிதின் கட்காரி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், சாலை விபத்துகளால் ஏறத்தாழ 1.8 லட்சம் பேர் உயிரிழப்பதாக  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், வியாழன்று கேள்வி நேரத்தின்போது சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது  அவர் தெரிவித்ததன் சாராம்சம் வருமாறு:

உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சரியான ஓட்டுநர் பயிற்சி இல்லாதது, பல்வேறு விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்கு காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை படிப்படியாக அமைக்க, ரூ.4 ஆயிரத்து 500 கோடி திட்டத்தை தொடங்கியுள்ளது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இது போன்ற 1600 நிறுவனங்களை அமைக்கும். இவை அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

மேலும் சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் பல விபத்துகள் பயிற்சி பெறாத ஓட்டுநர்களால் ஏற்படுகின்றன. ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பிராந்திய ஓட்டுநர் பயிற்சி மையங்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு பொருத்தமான திட்டங்களை அனுப்புமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு  அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula