free website hit counter

இத்தாலியின் பெஸ்காரா நகரில் பாரிய தீ விபத்து !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலியில் பெஸ்காரா நகரின் தெற்குப் பகுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியிலுள்ள இயற்கை வனப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ, காற்றின் துணையோடு கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், தீ அணைப்பு வீரர்கள் தீயைப்பபரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவவும் போராடி வருகின்றார்கள். அப்பகுதியில் எழுந்த பெரும் புகை மூட்டம் காற்றில் பரவியதால், கடற்கரையில் ஓய்வெடுத்தவர்கள்ஈ மற்றும் குளித்தவர்கள், கடற்கரைகளை விட்டு வெளியேறினர். காவல்துறையினரும் அதிகாரிகளும் குறைந்தது 800 பேரை இவ்வாறு வெளியேற்றினர்.

பினெட்டா டானுன்ஜியானா ( La Pineta Dannunziana ) எனும் இயற்கைப் பூங்கா மற்றும் வனப்பிரதேசத்திலேயே தீ பிடித்திருப்பதாகத் தெரிய வருகிறது. பினெட்டா டான்னுஞ்சியானா 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இயற்கைப்பூங்கா மற்றும் பைன் மரங்களைக் கொண்ட சிறிய இயற்கை வனப்பிரதேசமாகும். சுமார் 53 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த இயற்கைப்பூங்காவில், 107 வகையான பறவைகள், 14 பாலூட்டிகள், 11 நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஊர்வன மற்றும் பல்வேறு வகையான மீன்களுடன் ஏராளமான பிராணிகளும், சில வரலாற்றுக் கட்டிடங்களும் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியவை காண...!

கோடை விடுமுறையைக் கழிபப்பதற்காக பெருமளவு மக்கள் கடற்கரையில் கூடியிருந்ததாகவும், பாரிய அளவில் எழுந்த புகைமூட்டம் காரணமாக சிலர் சுவாசச் சிக்கலுக்கு உள்ளானதாகவும், அதனைத் தொடர்ந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கினறன.

சுவிற்சர்லாந்து எனும் கூட்டு முயற்சி !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction