சுவிற்சர்லாந்தில் மக்களுக்கான பொதுப் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் புகையிரதசேவை, தனது 175 வது ஆண்டினை நிறைவு செய்துள்ளது.
1847 ஆகஸ்ட் 9, ந் திகதி பாடன் மற்றும் சூரிச் இடையேயான ஸ்பானிஷ்-ப்ரோட்லி (ஸ்பானிஷ் பன்) பாதையில் முதலாவது புகையிரதசேவை ஆரம்பமானது. 23 கிலோமீட்டர் தொலைவிலான இந்த முதலாவது ரயில்தடத்தில் நிகழ்ந்த அந்த பயணம் 33 நிமிடங்கள் எடுத்தது.
சூரிச் மற்றும் பாடன் இடையேயான ரயில் பாதை 16 மாதங்களில் நிறுவப்பட்டதுஎன்றும், அப்போது அமைக்கப்பெற்ற அந்த வழித்தடத்தில் அமைக்கப்பெற்ற பாலங்களில் ஒன்று இன்னும் பயன்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இநத் ஆரம்பம் இன்றைய சுவிற்சர்லாந்தின் பொதுப் போக்குவரத்து மீதான் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. சரியான நேரத்துக்கு இரயில், பேருந்து, டிராம், படகு மற்றும் மலை இரயில் இணைப்புகளின் பிராந்திய வலையமைப்பு இந்த நம்பிக்கைக்கு காரணமாகும். கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு ஒரு நாளைக்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுவிஸ் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினர். சுவிற்சர்லாந்தில் ஒவ்வொரு இரயில் பயணிகளும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2,000 கிலோமீட்டர்கள் ரயிலில் பயணம் செய்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
175 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய வேளையில், சுவிற்சர்லாந்தின் போக்குவரத்து மந்திரி சிமோனெட்டா சொம்மாருகா "ரயில் எங்கள் அடிப்படை சேவையின் ஒரு பகுதியாகும். இது மக்களை ஒன்றிணைக்கிறது மற்றும் நம் நாட்டில் ஒற்றுமையை பலப்படுத்துகிறது, ”என்று கூறினார்.