free website hit counter

நன்றியின் பெருந்துளி !

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றிலிருந்து இரண்டு சகோதரர்கள் சேர்ந்து 175 ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் தொடங்கிய மருந்துக் கம்பெனிதான் பைசர்.

இம்யூனாலஜி எனப்படும் தடுப்பூசித் துறை, பூஞ்சைத் தொற்று, நரம்பியல் என படிப்படியாக வளர்ந்த பைசர் இன்று உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இந்தியத் தொழில் பங்காளிகளுடன் இணைந்து தென்னிந்தியாவின் கோவாவில் தன்னுடைய தொழிற்சாலையை 60-களில் தொடங்கியது.

1966-முதல் இந்தியப் பங்குச் சந்தையில் ‘பைசர் இந்தியா’பங்குகள் பட்டியலிடப்பட்டு லாபம் ஈட்டித்தரும் ‘ப்ளுஷிப்’ பட்டியலில் இரண்டாம் நிலைச் சந்தையின் முதலீட்டார்களிடம் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. கடந்த முதல் அலை கரோனாவில் இந்த நிறுவனத்தின் பங்கின் விலை ஏறியதே தவிர குறையவில்லை. (தற்போதைய விலை: ரூபாய் 5,286/-).

 

யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களுடைய கார்ப்பரேட் லாபியை தொழில்முறை நேர்த்தியுடன் செய்து, இந்தியாவில் 150-க்கும் அதிகமான தன்னுடைய மருந்துப் பொருட்களை சந்தையிட்டு, ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 2000 கோடி ரூபாய் விற்று வருவாய் ஈட்டி, (வரிகள் செலுத்திய பிறகான (PAT) நிகர லாபம் மட்டும் ஆண்டுக்கு 650 கோடி ரூபாய்) இங்கே தன்னுடைய மார்கெட் ஷேரை தக்கவைத்திருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களிடம் புகழ்பெற்ற ஜெலுசெல் பைசரின் தயாரிப்புத்தான். சரி, பைசர் புராணம் இப்போது எதற்கு என்கிறீர்களா?

காரணம் இருக்கிறது. பைசரின் கரோனா தடுப்பூசிகளும் தடுப்பு மருந்துகளும் அமெரிக்காவில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவுக்கு 510 கோடி ரூபாய் மதிப்பிலான கரோனா சிகிச்சை மருத்துகளை, தன்னுடைய விநியோக மையங்களிலிருந்து நேரடியாக மருந்துத் தேவையிருக்கும் அரசுப் பொது மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்குகிறது. இது கிட்டத்திட்ட அந்நிறுவனத்தின் ஓராண்டாண்டுக்கான நிகர லாபத்தின் மதிப்புக்கு இணையானது என்பதில் சந்தேகமில்லை. இந்தியர்களின் நலனின் பைசர் கொண்டிருக்கும் அக்கறை, பைசரை ஆதரிப்பதற்கான நன்றியின் பெருந்துளி அல்லது இந்தியர்கள் உயிரோடு இருந்தால்தான் தன்னுடைய மருத்துகளை அவர்களிடம் விற்கமுடியும் என்கிற விற்பனை உத்தி என இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆனால், பைசரை பின்பற்றி, இந்தியாவில் லாப வேட்டையாடும் மருந்து நிறுவனங்கள், தாங்களுடைய நிகர லாபத்தின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை இந்தியர்களின் உயிரைக் காக்க கொடுக்க வேண்டிய தருணம் இது. தலைவலி தொடங்கி கேன்சர் வரை உங்களூடைய மருந்துகளை வாங்கும் இந்தியர்களுக்கு, கையறு நிலையில், உங்கள் லாபம் மருந்தாக மாறி உயிர் தரட்டும்.

                                                                                                                                                                   நன்றியுடன் : Jeyanthan Jesudoss பேஸ்புக் சமூக வலைத்தளத்திலிருந்து

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction