கொரோனா வைரஸ் தொற்றின் பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கியமானதாகக் கூறப்படுவது முககவசம். இதனை தொடர்பற்ற இருவருக்கு இடையிலான இடைவெளியைப் பேண முடியாத நிலையில், கண்டிப்பாக அணியுமாறு வலியுறுத்தப்படுகிறது.
கோவிட் - 19 வைரஸ் தொற்று, மூச்சினாலும் பேச்சினாலும் பரவும் என்பதனால், மூக்கு மற்றும் வாய் என்பவற்றை முழுமையாக மூடும் வகையில் இது அணியப்பட வேண்டும். இவ்வாறாக முக கவசம் அணிவது பாது காப்பானதா ? எனும் கேள்வி பலருக்கும் உள்ளது. மேலும் அதன் பயன்பாடு தொடர்பிலான அறிவுறுத்தல்கள் பல வெளி வந்துள்ள போதிலும், இன்னமும் பொது மக்கள் பலர் அசிரத்தையாகவே இருப்பதைக் காண முடிகிறது.
முக கவசம் எவ்வாறு பாதுகாப்பு அளிக்கிறது என்பது தொடர்பிலான ஒரு விளக்கப் படம் இது. இருவருக்கான உரையாடல் நிலையில் அது அணியும் முறைகளில் எத்தனை சதவீதம் பாதுகாப்பினை அளிக்கிறது என்பது குறித்த தெளிவினை இது தருகிறது.