உயரத்திற்கு பயப்படுபவர்களுக்கு, வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் ஏறுவது ஒரு பயங்கரமான முயற்சியாகத் தோன்றும்.
உலகில் பல உயரமான கட்டிடங்கள் இருந்தாலும், மற்றவற்றை விட உயர்ந்த கட்டிடம் ஒன்று உள்ளது. 2, 722 அடி உயரத்தில், துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா தற்போது உலகின் மிக உயரமான கட்டிடமாக உள்ளது. கலைஞர் ஆண்ட்ரே லார்சன் (André Larsen) என்பவர் அந்த அசாதாரண உயரத்தில் இருந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்குக் காண்பித்துள்ளார்.
அவர்; புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் இருந்து அருகிலுள்ள தரைக்கு ட்ரோனை இயக்கி அதன் காணொளியை வெளியீட்டுள்ளார். அதை பார்ப்பது ஒரு சாகச அனுபவமாகும், இந்த அற்புதமான வானளாவிய கட்டிடத்தின் கீழே நீங்கள் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.