70 ஆண்டுகளுக்கு பின் பிறந்த நான்கு சிறுத்தை குட்டிகளை இந்தியா குதூகலமாக வரவேற்றுள்ளது.
உலகின் மிக வேகமாக ஓடக்கூடிய விலங்குகளில் ஒன்றான சிறுத்தை இனம் இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் நிலைக்கு ஆளானது. வேட்டை மற்றும் போதுமான இரை இன்மையால் சிறுத்தை விலங்கினம் 1952 ஆம் ஆண்டிலிருந்து அழிந்தே போய்விட்டதாக உத்தியோகபூர்வமாக அங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குனோ தேசிய பூங்கா' வனவிலங்கு சரணாலயத்தில் நமீபியா நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண் சிறுத்தை ஒன்றுக்கே இந்த நான்கு சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன.
இதனால் இந்திய சுற்றாடல் அமைச்சர் இது "மிக முக்கியமான நிகழ்வு" என அறிவித்துள்ளார்.
பெரிய பூனைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் பல தசாப்தங்களாக நடைபெற்றுவருவதோடு அதன் ஒரு திட்டமாக கடந்ந்த ஆண்டு நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.