free website hit counter

வீட்டில் இருந்து என்ன செய்வது?! : பகுதி 02

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்ற பகுதியில் வீட்டிலிருந்து கொண்டே உலகின் சில சுற்றுலாதளங்களை பார்வையிடுவதற்கான இணையதளங்களை தொகுத்து வழங்கியிருந்தோம்.

இப்பகுதியில் அதன் தொடர்ச்சியாக கணனி, கைப்பேசி தவிர்ந்த வேறு எவ்வாறான வழிகளில் உபயோகமாக நாட்களை கழிக்கலாம் என்பதை பார்ப்போம். வீட்டிலிருந்து பணிபுரிவோர் பணி நேரம் போக மிச்ச நேரத்தினை இதில் செலவிடலாம்.

உடற்பயிற்சி / யோகாசனம்

சிலர் ஏற்கனவே உடற்பயிற்சி அல்லது யோகாசனம் போன்ற ஆரோக்கியமான செயற்பாடுகளை செய்யத்தொடங்கியிருப்பீர்கள். அவ்வாறாயின் அதற்கான நேரத்தை அதிகரித்துக்கொள்ளலாம். இயலுமானால் உங்கள் வீட்டில் இருப்போருக்கும் சொல்லிக்கொடுத்து அவர்களோடு சேர்ந்து செய்யலாம். இன்னும் செய்யத்தொடங்காதவர்கள் : இதுவே உங்களுக்கான தருணம், நல்ல பழக்கம் ஒன்றை புதிதாக கற்றுக்கொண்டு அதனை பழக்கிக்கொள்ளவது அற்புதமானது ஆரோக்கியமானது. ஆக இன்றே ஆரம்பியுங்கள். உடற்பயிற்சி அல்லது யோகாசனம் பயிற்சிகளை உங்கள் வீட்டு முற்றத்திலோ அறையிலோ செய்யத்தொடங்கினால் நாளடைவில் பழக்கமாகிவிடும்.

வீட்டுத்தோட்ட பராமரிப்பு

உங்கள் வீடுகளில் வீட்டுத்தோட்டம் இருப்பின் இதுவரை அவ்விடங்களை நேருங்காமிலிருப்பின், இப்போதே அவைகளை சென்று காணலாம். என்ன என்ன வகையான செடிகள், மரங்கள் எப்படி வளர்க்கப்படுகின்றன? என்ன பயன் தருகின்றன? என உங்கள் அம்மாவுடனே பார்த்து பார்த்து கேட்டு கேட்டு அறிந்துkகொள்ளலாம். அம்மாவுடன் (பெரியோர் அல்லது தோட்டங்களை பராமரிப்போர்) உரையாடுவதற்கு சந்தர்ப்பமும் அமைந்துவிடுகிறது. மெல்ல தோட்டத்தினை பராமரிக்க தொடங்கலாம். தண்ணீர் பாய்ச்சுவது, விதைகளை நடுவது என தோட்டத்தில் பார்ப்பதற்கு வேலை அதிகம் உள்ளது. வீட்டுக்குள் இருந்து வெளிப்புற சூழலில் சற்று நேரத்தினை போக்க இவ் வழிமுறைகள் உதவலாம்.

சுயகற்கை / கற்பிப்பது

இதுவரை நீங்கள் பயில நினைத்த இசைக்கருவிகள் உங்கள் வீட்டில் இருந்தால் பயிலலாம். பாடல், ஆடல், ஓவியம் தீட்டுதல், சமைப்பது என விரும்பும் எதையேனும் கற்கலாம். இவ்வளவு காலமும் பணி நிமித்தம், நேரமின்றி கைவிட்ட இதுபோன்ற உங்கள் விருப்பமான பிறசெயற்பாடுகளை செய்யத்தொடங்கலாம். இப்போதுதான் ஆன்லைன் கற்றைமுறைமைகள் எல்லாவற்றிலும் வந்துவிட்டதே.

இவைதவிர உங்கள் வீடுகளில் அல்லது பக்கத்துவீடுகளில் பள்ளிக்குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கு முடிந்தளவு பள்ளிப்பாடங்களை புத்தகங்கள் வாயிலாக சொல்லிக்கொடுக்கலாம். அல்லது நீங்கள் கற்ற இசை, பாடல், ஆடல் கலையை சொல்லித்தரலாம். நீங்கள் வித்தியாசமாக யோசிப்பவரானால் பள்ளிப்பாடங்களை இம் மூன்றில் எதேனும் ஒன்றின் வாயிலாக சொல்லிக்கொடுக்கலாம். இலகுவில் அவர்களும் கற்றுக்கொள்வர். பாடநேரம் போக பலகை விளையாட்டுக்களிலும் (Board games) ஈடுபடலாம்.

எழுதுவது வாசிப்பு உரையாரடுவது

மேலும் உங்கள் எண்ணோட்டங்களை சிறு குறிப்புபுத்தகம் ஒன்றில் எழுதத்தொடங்குவது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு பயன் தரும். தனிமையில் இருக்கும்போது ஏற்படும் எண்ண அழுத்தங்களை யாரிடமும் கூற விரும்பாவிடின் இவ்வாறு எழுதிவைக்கலாம்.

நீங்கள் வீட்டிலே இருக்கமாட்டீர்களாக என ஏங்கித்தவித்த வீட்டு உறவுகளுடன் உரையாடுவது, இதுவரை சொல்லமுடியாமல் போன விடயங்களை பகிர்வது அவர்களுடன் முடிந்தளவு மகிழ்ச்சியான ஆரோக்கியமான இந்நேரங்களை அற்புத தருணங்களாக மாற்றிக்கொள்ள இதுவே வாய்ப்பு.

 

புத்தகங்களை வாசியுங்கள், உங்களுடன் சம்பந்தப்பட்ட அல்லது விருப்பமான வகையினை தெரிவுசெய்து வாசிக்கத்தொடங்கலாம். வாசிப்பே சுவாசிப்பு!

இவைதவிர படைப்புத் திறனை வளர்ப்பது மற்றும் உற்சாகப்படுத்துவது என்ற நோக்கில் உங்கள் ஒவ்வொருவரது படைப்பாக்கத்திற்குமான தளத்தினை ஒழுங்கமைக்கிறது 4தமிழ்மீடியா குழுமம் விபரம் பெற இணைப்பு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction