பறவைகள் எழுப்பும் ஒலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக காதில் கேட்டாலும் இந்த கூக்கபுரா பறவை எழுப்பும் ஒலி உண்மையில் " கூ கூக்கு கூகுகூ கூகு ஹா ஹா ஹா" என சிரிப்பது போலவே உள்ளது.
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட இந்த பறவைகளின் ஒலி பல நாட்டு ஹாலிவூட் திரைப்படங்களில் ஜிங்ல்ஸ் ஒலிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக இது குறித்து மற்றுமொரு சுவாரஸ்யமான தகவலையும் கூறுகிறார்கள். இந்தப் பறவையின் பிராந்திய அழைப்பு, குறிப்பாக பழைய படங்களில், பங்கு ஒலி விளைவுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது தி விஸார்ட் ஆஃப் ஓஸ் முதல் 1962 இன் கேப் ஃபியர் வரையும்; 1997 இன் ஜுராசிக் பார்க்: தி லாஸ்ட் வேர்ல்ட் வரை அனைத்திலும் சினிமா ஒலிக்காட்சியின் ஒரு பகுதியாக இந்தப்பறவையின் ஒலியை மாற்றிவிட்டார்கள்.
அது ஒரு குரங்குதான் கத்துவதாக எண்ணியிருந்தோம் ஆனால் அந்த பயங்கர சிரிப்பு சத்தம் இந்த கூக்கபுரா பறவையின் சொந்தம்!