யானைகள் இனத்தில் ஒரு யானை இன்னொரு யானையை பெயர் சூட்டி அழைக்கும் வல்லமை உள்ளதாம்.
இதனை ஒலியலைகளின் அதிர்வெண் (Frequency) இனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்ப ஆய்வு உறுதிப் படுத்தியுள்ளது. இதன் மூலம் பெயர் (Name) என்பது தனிப்பட மனித இனத்தின் ஒலி அலைகளின் வீச்சினை மட்டும் சார்ந்ததல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.
காட்டில் கூட்டம் கூட்டமாக வாழும் உயிரினங்களில் ஒன்றான யானைகள் தமக்கிடையே ஒவ்வொரு நபரையையும் அழைக்க தனித்துவமாக ஒலியலைகளைப் பயன்படுத்துவதை இந்த செயற்கை நுண்ணறிவு உறுதிப் படுத்தியுள்ளது. இது தொடர்பாக விலங்கியலாளர் டாக்டர் பார்டோ கூறும் போது மிக மென்மையான இந்த தனித்துவ ஒலிகள் யானைகளின் உணர்வு சார்ந்ததாக இருப்பதாகவும் விளக்கியுள்ளார்.
கென்யாவிலுள்ள வனவிலங்குகள் சரணாலயங்களில் பிரத்தியேகமாக நடத்தப் பட்ட இந்த ஆய்வில் யானையகளின் இந்த முணகல்கள் (rumbles) decode செய்யப் பட்ட போது வளர்ந்த பெண் யானைகள் சுமார் 469 தனித்துவ ஒலி அதிர்வுகளைப் பாவித்திருப்பது தெரிய வந்துள்ளது. சாதாரண மனிதக் காதுகளினால் உள்வாங்கப் படும் ஒலியலைகளின் அதிர்வெல்லையினால் இதனை வேறுபடுத்திப் பார்ப்பது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இதனை உண்மையிலேயே ஒரு தகவல் தொடர்பு சிக்னலா அல்லது பெயர் தானா என்றும் விஞ்ஞானிகள் சலசலக்கின்றனர்.
தகவல் - நியூயோர்க் டைம்ஸ்