சென்றவாரம் கூகுள் தேடு பொறியில் டூடுளில் விளையாட்டு ஒன்றை நடாத்திவிட்டிருந்ததை யாரேல்லாம் கவனித்தீர்கள்?
'உலகெங்கிலும் உள்ள வீரர்களுக்கு எதிராக ஒரே இலக்குடன் போட்டியிட, டூடுலைக் கிளிக் செய்யவும்! ஆனால் பொரிந்துவிடாதீர்கள்' எனும் அடைமொழி அடையாளத்துடன் டூடுள் விளையாட்டு இடம்பெற்றிருந்தது.
விளையாட்டு புரிந்ததோ இல்லையோ, சோளப்பொரியை ஏன் கூகுள் விஷேசமாக்கியது என்பது புரிந்தது.
மக்காச்சோளம்
ஐரோப்பியர்கள் அமெரிக்காவை "கண்டுபிடிப்பதற்கு" நீண்ட காலத்திற்கு முன்பே சோளம் கிமு 3600 க்கும் பண்டைய காலத்திற்கும் முந்தையது என்றும்; பண்டைய பெருவியன் கல்லறைகளில் சோளப்பொரி தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உலகின் பல பகுதிகளில் பிரதான உணவாக மாறியுள்ள மக்காச்சோளம் முதன்முதலாக தெற்கு மெக்சிகோவில் உள்ள பழங்குடி மக்களின் பயிராக வளர்க்கப்பட்டு பின் உலகம் முழுவதும் பரவலானது. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோளப்பொரியின் தோற்றம் உருவானது. ஆரம்பத்தில் தங்களின் சடங்கு வைபவங்களின் அலங்காரங்களாக சோளங்களை பயன்படுத்திவந்தனர். பின்னர் 1800களில் அமெரிக்காவில் பாலுடன் காலை உணவாக உண்ணும் பிரதானமான உணவாகவும் சிற்றுண்டியாகவும் மாறியது. 1890 களில் முதன்முதலில் சோளப்பொரியை உருவாக்கும் மெஷின்கள் கண்டுபிடிக்கப்பட்டது, இது அதிகமான மக்கள் மொறு மொறு விருந்தை அனுபவிக்க வழிவகை செய்தது.
அன்றிலிருந்து பண்ணைகள் முதல் கண்காட்சி மைதானங்கள், மற்றும் சினிமா திரையரங்குகள் வரை, சோளப்பொரி (பாப்கார்ன்) இல்லாமல் உலகம் முழுவதும் இயங்காது.
இந்த காலமற்ற சிற்றுண்டிக்காக வெவ்வேறு நாடுகளும் பிராந்தியங்களும் இப்போது தங்கள் சொந்த சுவைகளை கொண்டுள்ளன: பிரேசிலில் பிபோகா, ஜப்பானில் நோரி-டாப் பாப்கார்ன், மத்திய கிழக்கில் ஜாதார் பாப்கார்ன், கனடாவில் மேப்பிள் பாப்கார்ன் - என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது!
அது கேரமல் பூசப்பட்டதாக இருந்தாலும், வாணலியில் சமைத்ததானாலும், வெண்ணெயில் ஊறவைக்கப்பட்டதாக இருந்தாலும் அல்லது சிறிது உப்பு சேர்க்கப்பட்டதாக இருந்தாலும், பாப்கார்ன் ஒரு வேடிக்கையான மற்றும் மொறு மொறு விருந்தாகும், எப்போதும் மக்காச்சோளத்தின் மவுசு குறையாது.
2020 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 25ஆம் திகதியில்தான் தாய்லாந்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சோளப்பொரி இயந்திரம் உருவாக்கப்பட்டதுக்கு உலக சாதனையைப் பெற்றது. அதனை முன்னிட்டும் சோளப்பொரியின் பெருமையை கொண்டாடவும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள விளையாட்டு விளையாடி பார்ப்போமா? : celebrating popcorn