தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான திருப்புவனம் அருகே இருக்கும் கீழடி கிராமத்தில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் ஆறாம் கட்டமாக நடந்து வருகின்றன.
இந்த அகழாய்வுப் பணிகள் கீழடி கிராமத்தை ஒட்டிய கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட மே 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
இவற்றில் மணலூர் கிராமத்தில் தங்க வேலைகள் செய்யும் உலையும், கீழடியில் விலங்கின் எலும்புகளும் கொந்தகையில் முதுமக்கள் தாழியும் குழந்தை எலுப்புக்கூடு உள்ளிட்ட மனித எலும்புகளும் கிடைத்தன. இதற்கிடையில் அகரம் கிராமத்தில் கிபி 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இது தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
அவர்கள் மேலும் மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக காளையார்கோயிலை அடுத்த இலந்தக்கரையில் மூன்று நாணயங்கள் கிடைத்துள்ளனர். அவற்றில் ஒன்று 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சேர்ந்த சிரியா தேச தங்க நாணயம் கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழகத்துக்கும் பண்டைய சிரியாவுக்கும் இடையிலான கடல் வாணிபத் தொடர்புகள் உறுதிப்பட்டுள்ளன.