டெஸ்லா நிறுவன இயக்குனர் கடந்த வருடம் அவரது 6 ஆவது வாகனத் தயாரிப்பான பிளேட் ரன்னர் எஸ்குவே பிக்கப் டிரக் வண்டியின் அறிமுகப் படுத்திய போது அதன் கண்ணாடி ஒன்று எதிர்பாராத விதமாக உடைந்ததை திறமையாக சமாளித்துள்ளார்.
இந்த வீடியோ சமீப காலமாக யூடியூப்பில் வைரலாகி வருகின்றது.
நவம்பர் 21 ஆம் திகதி டெஸ்லா நிறுவனத்தின் CEO எலொன் முஸ்க் தனது சைபர் டிரக்கை அறிமுகப் படுத்தினார். 2003 ஆமாண்டு உருவாக்கப் பட்ட இந்நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பான இந்த டிரக் 250 மைல்கள், 300 மைல்கள், மற்றும் 500 மைல்கள் வீச்சங்களில் பாவனைக்கு வரவுள்ளன. இதன் அறிமுக விழாவில் குறித்த சைபர் டிரக்கின் மிக வலிமையான உலோகம் ஒரு இரும்பினால் தாக்கப் பட்ட போது சிறிதும் சேதமடையவில்லை.
ஆனால் எதிர்பாராத விதமாக இந்தன் வடிவமைப்பு இயக்குனர் பிரான்ஷ் வொன் ஹொல்ஷௌசென் ஒரு மிகவும் பாரமான உலோக உருண்டையால் மிக அருகில் இருந்து சைபர் டிரக்கின் யன்னல் கண்ணாடியைத் தாக்கிய போது அது உடைந்து விட்டது.
இந்த யன்னல் கண்ணாடி மிகவும் கடினமான Shatterproof Window என்று கூறப்பட்டது. ஆனால் அது உடைந்த மறு கணமே ஓ இது மிகவும் வலிமையான பந்து என்றும் மிக அருகில் தாக்கப் பட்டு விட்டது என்றும் எலொன் முஸ்க் சமாளித்தார். இது தொடர்பான யூடியூப் வீடியோ கீழே :
இந்த நிகழ்வில் அறிமுகப் படுத்தப் பட்ட அதிநவீன சைபர் டிரக்குகளின் தன்மை மற்றும் விலை குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..