அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பதற்காக தீயணைப்பு வீரர்களாக ஆடுகள் பணி அமர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ காட்டுப்பகுதிகளில் காய்ந்த இலை குலை மற்றும் புதர்களை உண்பதற்காக ஆடுகளை புதிதாக வேலைக்கு எடுத்து வருகின்றனர். அவை புல் அறுக்கும் இயந்திரங்களால் கூட அறுக்க முடியாத பாறை இடுக்குகள் உள்ளிட்ட சிக்கலான பகுதிகளை இணங்கண்டு இலகுவாக அங்கு மேய்ந்து விடுவதால் அவை ஒரு இயற்கை புல் அறுக்கும் இயந்திரங்களாக கருதப்படுகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்படும் சந்தர்பங்களை வெகுவாக குறைத்து ஆபத்துக்களை தடுக்கிறது.
கொலராடோ பகுதியில் தீயாக வேலை செய்யும் இந்த தீயணைப்பு வீர ஆடுகள் நிபுணத்துவம் பெற்ற கோட் கிரீன் என்ற நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டன.