free website hit counter

மூலிகை அறிவோம் - கேன்சரை தடுக்கும் "கோப்பி"

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
WHO இன் ஆய்வறிக்கையின் படி கோப்பி மார்பக புற்றுநோய்க்கு எவ்விதத்திலும் காரணமாகாது. ஆனால் அது பெருங்குடலையும் நேர்குடலையும் புற்றுநோய் வராமல் தடுக்கும் அற்புத வரம் கொண்டதாக குறிப்பிடுகின்றது.
கோப்பி பிரியர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு (Bronchial Asthma) சுவாச இரைப்பு நோய் வருவதிலிருந்தும் உங்களை பாதுகாக்கின்றது.

மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஒரு கூடுதல் நற்செய்தி கோப்பியில் உள்ள சில இரசாயனங்களால் கணையச் சுரப்பி (Pancreas) தூண்டப்பட்டு Insulin சுரப்பும் அதிகரிக்கப்படுகின்றது.

ஆனால் எதுவும் அளவுடன் உள்ளெடுப்பதே ஆரோக்கியம் தரும். அளவை மீறினால் கோப்பியும் தனக்கு நம்மை அடிமைப்படுத்துவதுடன் சில பக்க விளைவுகளையும் உண்டாக்கும்.

குறிப்பு- கோப்பியும் மருந்து என்றவுடன் Instant Coffee Pack(உடனடி கோப்பி தயாரிப்புகள்) ஐ வாங்கி Branded Company களை வாழ வைக்காமல் இயற்கையில் கிடைக்கும் கோப்பி விதைகளை பயன்படுத்தி உங்கள் உயிருடலை வாழ வைக்கவும்.

தாவரவியல் பெயர்- Coffea arabica
குடும்ப பெயர்- Rubiaceae
ஆங்கிலப் பெயர்- Arabian coffee
சிங்கள பெயர்- coffee
சமஸ்கிருத பெயர்- Mleecha phal
வேறு பெயர்கள்- காப்பி

பயன்படும் பகுதி- விதைகள்

சுவை- கைப்பு, துவர்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு

வேதியியல் சத்துக்கள்-
Caffeic acid
Chlorogenic acid
Caffeine
Theophylline
Furfuryl methyl mercaptan derivatives
Atractyloside
Caffeol
Diterpenes

மருத்துவ செய்கைகள்-
Anticarcinogenic - புற்றுநோய் எதிரி
Antilithic - கற்றுகளாக்கி
Antinarcotic - போதையகற்றி
Antisoporific - தூக்கமகற்றி
Astringent - துவர்ப்பி
Diuretic - சிறுநீர் பெருக்கி
Stimulant- வெப்பமுண்டாக்கி

தீரும் நோய்கள்-
சோர்வு, செரியாமை, குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான், வாந்திபேதி, வாந்தி, சந்நி, இருதயபடபடப்பு, வீக்கம், அபின் விஷம், குளிர்ச் சுரம், காயம்

பயன்படுத்தும் முறைகள்-
காப்பியைத் தக்க அளவு சேர்த்துக் கஷாயமிட்டுப் பானஞ்செய்தால் உண்ட உணவைச் செரிப்பிக்கவும், அதைத் தாதுக்களிற் சேர்க்கவும் குடலுக்கு உதவியாயிருக்கும். சப்த தாதுக்களையும் கட்டுப் தாதுக்களையும் கட்டுப்படுத்தும்.

ஆனால், மூளையில் சேரவேண்டிய இரத்தத்தைக் குறைத்து நரம்புகளில் (Nervous tissue) அதிக அளவில் சேர்க்கும்.

மனச் சோர்வை நீக்கி நித்திரையைக் குறைக்கும். உற்சாகத்தையும் உண்டுபண்ணும்.

அதிக அளவிற் சேர்த்து உட்கொண்டால், உமிழ் நீரைக்குறைத்து ஜீரணசக்தியைக் கெடுத்து, அதன் மூலமாய் இரைப்பை தன் வேலையைச் சரியாய்ச் செய்யவிடாமல் தடுக்கும். நாளடைவில் தீராத்தலை வலி, நித்திரையின்மை, இருதயப் பட்படப்பு, பக்கவாதம், சந்நி முதலிய நோய்களைப் பிறப்பிக்கும். மேலும் குன்மம் முதலிய வயிற்று நோய்களைத் தந்து முதிர்வயதிற்குரிய குறிகுணங்களை வெகு சீக்கிரத்திற்காட்டும்.

இப்பானம் குழந்தைக்கு நித்திரையின்மையைக் கொடுத்து, அதன் வளர்ச்சியைத் தடுக்கும். ஆகையால் இப்பானத்தை குழந்தைகளுக்குக் கொடுத்தல் தகாது.

தகுந்த அளவில் கொடுக்க, கக்குவான், குழந்தைகளுக்குண்டாகும் வாந்திபேதி,நோய்கள் சாந்தமாகும்.

அதிசாரபேதி, சந்நி, இருதயப்படபடப்பு முதலிய நோய்கள் சாந்தமாகும்.

சிறுநீரை பெருக்கி கைகால் வீக்கங்களைக் குறைக்கும்.

சந்நிபாத சுரத்தின் ஆரம்பத்தில் கொடுக்க, மிகுந்த குணந்தரும்.

அபின் விடமித்தலுக்கு காப்பிப்பானம் மிகுந்த பயனுள்ளது.

சஸ்திரசிகிச்சை செய்த நோயாளிகளுக்கு இப்பானத்தை ஒரு தேக் கரண்டி வீதம் அடுத்தடுத்துக் கொடுக்க வாந்தியைக் கண்டிக்கும்.

குளிர்சுரத்திற்கு இப்பானம் மிகவும் ஏற்றது.

சிறிய இரத்த காயங்களுக்கு கோப்பி தூளை இட இரத்தம் வெளியேறுவது தடைப்படும்.

வாய்ப்புண்களுக்கு கோப்பித் தூள் இட புண்கள் விரைவில் குணமாகும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction