free website hit counter

மூலிகை அறிவோம் - மனம் மயக்கும் மணமும் குணமும் கொண்ட "சாதிக்காய்"

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மனம் மயக்கும் மணமும் குணமும் கொண்ட சாதிக்காய்.
உணவில் வாசனைத் திரவியமாகவும் சுவையூட்டியாகவும் மட்டுமே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சாதிக்காயினதும் சாதிபத்திரியினதும் (வசுவாசி) இன்னோரென்ன மருத்துவ பயன்களை இம் மருத்துவ உரையில் பார்க்கலாம்.

தாவரவியல் பெயர்- Myristica officinalis/ Myristica fragrans
குடும்ப பெயர்- Myristicaceae
ஆங்கிலப் பெயர்- Nutmeg
சிங்கள பெயர்- Sadhikka
சமஸ்கிருத பெயர்- Jati-phalam
வேறு பெயர்கள்-
குலக்காய், ஜாதிக்காய்

பயன்படும் பகுதி-
காய், விதையுறை

சுவை- துவர்ப்பு , கார்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு

வேதியியல் சத்துக்கள்-
Myristicin
licarin-B
dehydro diisoeugenol
volatile oil
resorcinols
malabaricones B & C

மருத்துவ செய்கைகள்-
சாதிக்காய்
Aphrodisiac- இன்பம் பெருக்கி
Aromatic- மணமூட்டி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Narcotic- மூர்ச்சையுண்டாக்கி
Stimulant- வெப்பமுண்டாக்கி
Tonic- உரமாக்கி

சாதிபத்திரி
Aphrodisiac- இன்பம் பெருக்கி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Hypnotic-உறக்கமுண்டாக்கி
Stimulant- வெப்பமுண்டாக்கி

தீரும் நோய்கள்-
வாயு, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, ஒற்றைத் தலைவலி, அசீரணம், அதிசாரபேதி, சீதபேதி, வாதரோகம், கீல் வாதம், பெரும்பாடு, சூதகவலி,

பயன்படுத்தும் முறைகள்-
கறிமசாலாவோடும், தாம்பூலத்தோடும் இதைச் சேர்ப்பது வழக்கம்.

சாதிக்காய் 260 mg, சுக்குத்தூள் 260 mg, சீரகம் 650 mg, நன்றாகப் பொடிசெய்து, உணவுக்குமுன் சாப்பிட, வயிற்றிலுண்டாகும் வாயுவைப்போக்கி, சீரணத்தை உண்டாக்கும்.

2 g தூளை பாலில் கலக்கி, அதிசார பேதிக்குக் கொடுக்கலாம்.

இத்தூளை அபினிக்குப் பதிலாகவும் உபயோகிக்கலாம்.

சாதிக்காய்த்தைலம்
சாதிக்காய்த் தூளை நீரினுள் போட்டு, வாலையியந்திரத்திலிட்டு எண்ணெய் வடிக்கப்படும். இதனைப் பல்வலிக்கு உபயோகிக்கலாம்.
இது வெண்ணிறமும் - வாசனையுமுடையது. அளவு-1-5 துளி.

சாதிக்காய்த்தைலம் (வேறுமுறை) சாதிக்காயைப் பொடித்து ஆவியில் அவித்து, சூட்டுடனிருக்கும்போது கசக்கிப் பிழிவதனால் வரும் எண்ணெய். வாதநோய், கீல்வாதம் முதலியவைகளுக்கு உபயோகிக்கலாம். மேலும் அதிசாரபேதி, சீதபேதி முதலியவைகளில் உண்டாகும் வேதனையை குறைப்பதற்கு உள்ளுக்குக் கொடுக்கலாம்.

அளவு:-1-3 துளி.

ஜாதிபலாதிச்சூரணம்
சாதிக்காய், சணல், சூடன், ஏலக்காய், கிராம்பு, சித்திரமூலம் வேர்ப்பட்டை இவைகளின் சூரணங்களை வகைக்கு 4 g எடுத்து, நன்றாய் கலந்து 390 mg முதல் 780 mg வரையில் காசம், வயிற்றுவலி, ஒற்றைத் தலைவலி, பெரும்பாடு சூதகவலி, வாத வலி முதலியவைகளுக்குக் கொடுக்கலாம்.

ஜாதிக்காய் ஊறல் குடிநீரை வாந்திபேதியிலுண்டாகும் தாகத்துக்குக் கொடுக்கலாம்.

ஜாதிக்காயை அரைத்துக் கண்ணைச் சுற்றிப் பற்றிட கண் ஒளியடையும்.

சாதிபத்திரி / வசுவாசி
இது, சாதிக்காயின்மீது மூடிக்கொண்டு, பச்சையாயிருக்கும்போது செந் நிறமும், உலர்ந்த பின் செம்மஞ்சள் நிறமுமாயிருக்கிற பொருள். இதையும் கறிமசாலா, தாம்பூலம் இவைகளில் சேர்ப்பது வழக்கம்.

தாபசுரம், கிராணி, சலக்கழிச்சல் இவை நீங்கும். தாதுவிருத்தியும், பித்தமும் உண்டாகும்.

பிரியாணி போன்ற விஷேட உணவுகளில் வாசனைத் திரவியமாகவும் சுவையூட்டியாகவும் பயன்படும்.

உணவில் வசுவாசியை சேர்ப்பதனால் ஈரலில் நஞ்சகற்றும் தொழிற்பாட்டை தூண்டுகிறது.

ஈரலில் கொழுப்பு ஒட்சியேற்றப்படுதலையும் கணிசமான அளவு குறைக்கிறது.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction